பணி பாதுகாப்பு கேட்டு முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை Part-time teachers request to the principal for job security பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றி, முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்:
பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :
2012-ம் ஆண்டில் இருந்து 12ஆண்டாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்வார் என 30 மாதங்களாக காத்துள்ளனர்.
இதை வலியுறுத்தி ஆயிரக்கணக்கில் மனுக்கள், பல கவன ஈர்ப்பு போராட்டங்கள், சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏ க்கள் கோரிக்கை, அனைத்து கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தற்போது பணி செய்து வரும் 10359 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹10ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.
மேலும் ₹20ஆயிரம் சம்பளம் வழங்கினால் காலமுறை சம்பளம் கிடைக்கும். இதனை மனிதாபிமானம் கொண்டு இந்த 10ஆயிரம் குடும்பங்கள் வாழ முதல்வர் மனது வைத்தால் போதும்.
எங்கள் வேலை குறித்து யாருக்கும் எதுவுமே தெரிவது இல்லை.
அதாவது,
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் 10ஆயிரம் சம்பளம் தான் கிடைக்கிறது.
மே மாதம் சம்பளம் கிடையாது.
தீபாவளி வருகிறது, ஆனால் இதை கொண்டாட பண்டிகை முன்பணம்கூட எங்களுக்கு கிடைப்பது இல்லை.
இறந்தவர்களுக்கு குடும்ப நல நிதி கிடையாது.
போனஸ் கிடையாது.
இப்படி பண சலுகைகள் ஒன்றுகூட எங்களுக்கு கிடைப்பது இல்லை.
இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி வருகிறது.
பள்ளிகளில் நாங்கள் வாரத்திற்கு 3 அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்கிறோம். இதனை நீட்டித்து, நிரந்தர வேலை செய்யும் ஏனைய ஆசிரியர்களைப் போலவே, அனைத்து நாட்களும் பணி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.
அதுபோல் பகுதிநேரம் என்பதை மாற்றி முழுநேரம் பணி வழங்க வேண்டும் என கேட்டு வருகிறோம்.
மே மாதம் சம்பளம் என கேட்டு வருகிறோம்.
அனைத்து நாளும் வேலை, அனைத்து மாதமும் சம்பளம் கிடைத்தால் தான் நாங்கள் செய்யும் இந்த வேலைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.
அரசு வேலையை நம்பி வந்தவர்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் சம்பளம் மட்டுமே கிடைத்தால் எங்கள் வாழ்க்கை எப்படி முன்னேறும் என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
சமுதாயத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க தற்போதைய நிலை மாறவேண்டும்.
இதற்கு பணி நிரந்தரம் மட்டுமே இனி தீர்வாக இருக்க முடியும்.
அதற்கு முதல்வர் திமுகவின் 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதற்கு ஆணையிட வேண்டும்.
* S. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.