கல்வி_கதறுகிறது 😍
இதே பிரச்சனைதான் தொடர்கிறது, எல்லா மாவட்டங்களிலும்....அரசு மேல்நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இதே தான்.
இரண்டாம் பருவம் துவங்கி இன்னும் ஒருநாளும் பாடம் நடத்த ஆரம்பிக்க இயலவில்லை. இதோ சீக்கிரம் இந்த மாதம் ஓடிவிடும், பிறகு தீபாவளி , கலைத்திருவிழாவும் மாவட்ட அளவில் அக்டோபர் இறுதி வாரத்தில், மாநில அளவில் நவம்பர் மாதம் இறுதி வாரம்....
அப்புறம் டிசம்பர் முதல் வாரத்தில் பாடம் நடத்தி இரண்டாவது வாரத்தில் அரையாண்டுத் தேர்வு. அதுக்குள்ள....
நூலகப் புத்தகங்கள் படிக்க வச்சு EMIS இல் ஏன் ஏற்றவில்லை😭?😢
( ம்க்கும்....பசங்க படிக்க நேரமே இல்லை😞.. சும்மா வாச்சும் ஏத்துங்க😭) சிறார் திரைப்படம் காட்டி மாணவரை போட்டிக்கு ஏன் தயாரிப்பு செய்ய வில்லை😭?
(பையன் படம் மட்டும் பாக்கறான்...அது பற்றி உரையாட நேரமில்லை😞...அப்படி எப்படி சொல்வீங்க... காரணம் சொல்லக்கூடாது😭)
மன்றங்கள் எத்தனை நடத்தப்பட்டது?😭 அல்லது ஏன் நடத்தவில்லை?😭
( மன்றம் பதிவேடு நோட்டு ஏன் வரல😭? எமிஸ் லயும் இந்த வாட்டி ஏத்தனும்...செய்துடுங்க.😊..
பத்து மன்றத்துக்கு மேல இருக்கு... நேரமே இல்லை😞 அப்படி எல்லாம் காரணம் சொல்லக் கூடாது 😭நடத்துங்க.😭.)
நடத்திடறோம் 😞
வாசிப்பு இயக்கம் நடத்தலன்னாலும் நடத்தினதா காட்டணும்ல😭...
( எமிஸ் லகேட்கறாங்க தான😭...)
டேய்...என்னைக்கு புத்தகம் மாத்தினீங்க.😭..
தெரில...🤣
டீச்சர்ஸ் மேகசின் என்ன இருக்கு?😭
தெரில...🤣
பசங்களுக்குத் தெரியாது.😞
ஹைடெக் லேப் க்விஸ் இந்த தேதியில் நடத்திட வேண்டும்.😭
( கேள்வி இந்த தேதியில் தயாராயிரணும்....வராத பசங்களயும் எப்படியாச்சும் எழுத வச்சுடணும்😭
செய்துடுறோம்😞)
NAS இதன்படி எஸ்இஏஎஸ் தேர்வு நவம்பர் 3 இல் நடத்தப்படும்.😭 ஸ்லோ லேனர்ஸ் வகுப்பறையில் தினம் தேர்வு வச்சீங்களா?😭
இரட்டை வரி எழுத வச்சு திருத்தி கையெழுத்து தேதியோட ஏன் போடல?😭
நாலு வரி நோட்டு எழுத வச்சு திருத்தி தேதியோட கையெழுத்து ஏன் போடலை?😭
நோட்ஸ் ஆஃப் லெசன் 12 டாப்பிக் வச்சு எழுதாம இருக்கக் கூடாது.😭
ஒவ்வொரு நாளும் கையில் கற்றல் உபகரணங்கள் கொண்டு போகாட்டி App இல் No போட சொல்லி இருக்காங்க.😭
ஸ்ஸ்....ப்பா....
பையன் படிச்சானா இல்லையான்னு கேட்க ஆளில்லையே....
எல்லோருக்குமாக..
#உமா
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.