3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 29, 2023

Comments:0

3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் Demonstration demanding cancellation of accreditation of 3 medical colleges

3 மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவைக் கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி என 3 கல்லூரிகளுக்கு தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன் கட்சிக் கொடி மற்றும் பதாகையுடன் திரண்ட கட்சியினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமை வகித்தார். மாணவர்களின் நலன் கருதிஅங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கீர்த்தி வர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews