6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 05, 2023

Comments:0

6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

6-9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Advance Examination for Classes 6-9 - School Education Notification

தமிழ் நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் சுமார் 1 கோடி பேர் படிக்கின்ற னர். இவர்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பில் படிக்கும் ஆரம்ப பள்ளி மாணவ மாணவியர்தவிர 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவ மாணவியருக் கான ஆண்டுத் தேர்வுஒவ் வொரு ஆண்டும் ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்தப் பட்டு, மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப் படும்.

அதன்படி, இந்த ஆண் டும் ஏப்ரல் 24ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வுகள் நடத் தப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப் பம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. அதனால், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு முன்கூட் டியே தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், பெற் றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

அனைத்து வகைஉயர் நிலை, மேனிலைப் பள்ளி கள் மற்றும் மெட்ரிக் பள் ளிகளில் 6ம் வகுப்புமுதல் 9ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக் கான ஆண்டுத் தேர்வு ஏப் ரல் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்த வேண் டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

time table

6 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு எப்போது?

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews