படிப்பில் சேர்ந்து 2 நாளில் விலகிய மருத்துவ மேல்படிப்பு மாணவியிடம் சான்றிதழ்களை திரும்ப தரவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 05, 2023

Comments:0

படிப்பில் சேர்ந்து 2 நாளில் விலகிய மருத்துவ மேல்படிப்பு மாணவியிடம் சான்றிதழ்களை திரும்ப தரவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

படிப்பில் சேர்ந்து 2 நாளில் விலகிய மருத்துவ மேல்படிப்பு மாணவியிடம் சான்றிதழ்களை திரும்ப தரவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு Certificates must be returned to post-graduate medical students who withdraw within 2 days of joining the course: ICourt orders

சென்னை மருத்துவக் கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா மே 1ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை எனக் கூறி தன் சான்றிதழ்களை திருப்பித்தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி அந்த தொகையை செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் அஷ்ரிதாவுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்ககம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ கல்வி தேர்வு குழு, கல்லூரி டீன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தேர்வுக் குழு மற்றும் கல்லூரி முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சினேகா, ஒரு இடம் காலியாவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிவதற்கு முன்பாகவே மாணவி தனக்கு வழங்கப்பட்ட இடத்தை ஒப்படைத்து விட்டதால், அந்த இடத்தை அவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கி இருக்க முடியும். கட்டணம் வசூலிப்பது தொடர்பான விளக்க குறிப்பில் சில தெளிவின்மை இருக்கத்தான் செய்கிறது. எனவே, சான்றிதழ்களை பெற 15 லட்ச ரூபாயை மாணவி செலுத்த வேண்டுமென பிறப்பித்த உத்தரவு செல்லாது. தனி நீதிபதி உத்தரவு உறுதிசெய்யப்படுகிறது. அரசின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மாணவியிடம் 2 வாரத்தில் சான்றிதழ்களை தேர்வு குழு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews