நடப்பு 2022-23 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தைச் சேர்க்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வி அமைச்சர் தாஸ் கூறுகையில்,
மாநிலம் ஏற்கனவே மூன்று கரோனா அலைகளை அனுபவித்து, நான்காவது அலைக்குத் தயாராகி வருவதால் எதிர்காலத்தில் இளைய தலைமுறையை தயார்படுத்துவதற்காக தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றார்.
இதேபோன்று, இயற்கை சீற்றங்களால் மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால், பருவநிலை மாற்றத்தால் மனித சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இது உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் மாணவர்கள் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நடப்பு கல்வியாண்டின் இரண்டாம் பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
தொற்றுநோய் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் 75 சதவீத பாடத்திட்டங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டன, ஆனால் இந்தாண்டு 100 சதவீதம் கற்பிக்கப்பட்டு, அதற்கேற்ப பொதுத்தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.