சரியான தலைவரை தேர்ந்தெடுக்கும் அறிவை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளில், 'மாணவர் தேர்தல்' நடத்தப்பட்டு வருகிறது.சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் சோமள்ளி கிராமத்தில் ஸ்ரீகங்காதரேஸ்வரா அரசு முதன்மை தொடக்க பள்ளி உள்ளது. இங்கு மாணவர் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் போட்டியிட விரும்புவோர், 10 ரூபாய் கட்டணம் செலுத்தி போட்டியிடலாம் என்று கூறப்பட்டது.தற்போது நடக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல் போன்றே, ஓட்டு சீட்டு நடைமுறை, விரலில் மை போன்றவை கடைப்பிடிக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட்ட மாணவர்கள், பிரசாரமும் செய்தனர். தேர்தல் நாளன்று, பள்ளி மாணவர்கள் சிலர், போலீஸ் சீருடை அணிந்து, கண்காணித்து வந்தனர். வாக்காளர்களான மாணவர்கள், தங்கள் ஆதார் அடையாள அட்டை காண்பித்து ஓட்டு போட்டனர். தேர்தல் அதிகாரி மது கூறியதாவது:அதிக ஓட்டு பெற்ற மாணவர், பள்ளி முதல்வராக அறிவிக்கப்படுவார். மேலும் சில மாணவர்கள், அமைச்சர்களாக நியமிக்கப்படுவர். பிரார்த்தனை துறை அமைச்சர், பள்ளியில் பிரார்த்தனை செய்வதையும்; உணவுத்துறை அமைச்சர், சத்துணவு வழங்கலை கண்காணிப்பது; சுகாதார துறை அமைச்சர், பள்ளியை சுத்தமாக வைத்து கொள்வது, மாணவர்களின் உடல் நலனை கண்காணிப்பது.உள்துறை அமைச்சர்,
தினமும் பள்ளி முடிந்து அனைவரும் சென்ற பின், பள்ளி அறைகளை பூட்டுவது; சுற்றுலாவுக்கு நிதி சேர்ப்பது, பூஜைகளுக்கு நிதி செலவிடுவது; நிதித்துறை அமைச்சர், பள்ளி கட்டணம் வசூல் விபரம்; கல்வி துறை அமைச்சர், மாணவர்களின் குரூப் படிப்பு; நீர்ப்பாசன துறை அமைச்சர்,குடிநீர், கழிப்பறை சுத்தம் செய்வதை கண்காணிப்பார்.இதுபோன்று மாணவர்களிடையே தேர்தல் நடத்துவதால், எதிர்காலத்தில் தங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில் திறமையை வளர்த்து கொள்வதில் ஆர்வம் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுபோன்று, மாவட்டத்தின் பல பள்ளிகளில் மாணவர் தேர்தல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.