அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சுத் திறன் பயிற்சி வழங்கப்படவுள்ள நிலையில், முன்னதாக ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை கற்றுத் தரும் ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக முதன்மைக் கருத்தாளா்களுக்கு மாநில அளவிலான பயிற்சி கடந்த மே 30, 31-ஆம் தேதிகளில் வழங்கப்பட்டன.
இதையடுத்து முதன்மைக் கருத்தாளா்கள் மூலம் இதர ஆசிரியா்களுக்கு வட்டார அளவில் ஜூன் 23, 24-ஆம் தேதிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வழங்கப்படவுள்ளது. அரசுப்பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் பயிற்சி வழங்கத் திட்டமிட்டுள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடா்பான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.