பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் நூலகப் பயிற்சியில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்துபெங்களூருமாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தின் நூலகத்துறையின் சாா்பில் நூலகப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளை பெற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே பயிற்சி பெற்றவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது. பயிற்சிக்கு தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். விண்ணப்பங்களை ஜூன் 24-ஆம் தேதிக்குள் செலுத்தலாம். நிறைவுசெய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவாளா், பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம், சென்ட்ரல் கல்லூரி வளாகம், பெங்களூரு-1 என்ற முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.