சம்பள உயர்வு அறிவிப்பு கண்துடைப்பு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம் - Salary hike announcement an eyesore - Part-time Teachers' Federation condemns
பகுதிநேர ஆசிரியர் களுக்கு பணி நிரந்தரம் ஒன்றே தீர்வு; சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் கண் துடைப்பு நடவடிக்கை என கண்டிக்கத்தக்கது' பகுதிநேர ஆசிரியர் கூட்ட மைப்பு தெரிவித்துள்ளது. மாநில ஒருங்கிணைப் பாளர் செந்தில்குமார் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கைப்படி பணிநிரந்தரம் செய்திருந் தால் போராட்டத்தின் போது பகுதிநேர ஆசிரியர் கண்ணன் இறந்திருக்க மாட்டார். உயிரிழந்த ஆசி ரியருக்கு ரூ.1 கோடி நிதி வழங்கி, மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பகுதிநேர ஆசிரியர் கள் சம்பள உயர்வுக்காக போராடவில்லை. பணி நிரந்தரம் செய்யவே போராட்டம். உயிரிழந்த கண்ணனின் உணர்வில் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களும் உள்ளனர். சம்பள உயர்வு வழங்கியதன் மூலம் பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என தி.மு.க., தெளிவாக் கியுள்ளது. அரசின் சம்பள உயர்வு நடவடிக்கை கண் டிக்கத்தக்கது.
அரசு சலுகைகள் கிடைக்க பகுதிநேர ஆசி ரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண் டும். பொங்கல் போனஸ், இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், மருத்துவ காப் பீடு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓட்டுக்காக இலவசங் கள் கொடுக்க நிதி உள் ளது. ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய மனம் இல்லையா. மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற சாக்கு போக்கை சொல் லியே இனியும் ஏமாற்ற வேண்டாம். இன்னும் உயிரிழப்புகள் ஏற்படுவ தற்குள் பகுதிநேர ஆசிரி யர்களின் பணி நிரந்தர அறி விப்பை உடன் வெளியிட வேண்டும் என்றார்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.