முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கை: கட்-ஆஃப் குறைப்பு - 18,000 இடங்கள் காலியாக இருப்பதால் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 15, 2026

Comments:0

முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கை: கட்-ஆஃப் குறைப்பு - 18,000 இடங்கள் காலியாக இருப்பதால் நடவடிக்கை



முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கை: கட்-ஆஃப் குறைப்பு - 18,000 இடங்கள் காலியாக இருப்பதால் நடவடிக்கை - Postgraduate medical admissions: Cut-off reduced - action taken as 18,000 seats remain vacant

NEET PG தேர்வில் (-40) மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது!

2025 NEET PG தேர்வில் SC, ST, OBC பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் சதவீதம் 0%ஆகக் குறைப்பு.

Negative Marking முறை இருப்பதால், 800க்கு -40

மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது என அறிவிப்பு.

பொதுப் பிரிவினருக்கான Cut-off மதிப்பெண் 50%-லிருந்து 7%-ஆக குறைப்பு. அதாவது 800-க்கு 103 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும். 2ம் கட்டக் கலந்தாய்விற்குப் பிறகும் தனியார் கல்லூரிகளில் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பதால், ஒன்றிய அரசு முடிவு. முதுநிலை மருத் துவப் படிப்புகள் சேர்க்கைக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தகுதி மதிப்பெண்ணை (கட்-ஆஃப்) தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம் எஸ்) குறைத்து உத்தரவிட்டது.

மாணவர் சேர்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுக் குப் பிறகும் நாடு முழுவதும் 18,000 இடங்கள் காலியாக இருந் ததைத் தொடர்ந்து, இந்த நடவ டிக்கையை என்பிஇஎம்எஸ் மேற் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக என்பிஇஎம் எஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:

முதுநிலை மருத்து வப் படிப்பு சேர்க்கையில் எஸ்சி., எஸ்டி. உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டி ருந்த குறைந்தபட்ச நீட்-பிஜி மதிப் பெண் விகிதமான (பர்சென்டைல்) 40 சதவீதமானது, பூஜ்ஜியம் சதவீ தமாகக் குறைக்கப்படுகிறது.

அதுபோல, பொதுப் பிரிவு மாணவர்களுக்கு நிர்ணயம் செய் யப்பட்டிருந்த குறைந்தபட்ச நீட்-Hஜி மதிப்பெண் விகிதமான (பர்சென்டைல்) 50 சதவீதம், 7 சத வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதுநிலை நீட் தேர் வில் 800-க்கு ‘மைனஸ்' 40 மதிப் பெண் பெற்ற எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி உள்ளிட்ட இடஒதுக்கீடு பிரிவு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற் கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுபோல, நீட் தேர்வில் 800-க்கு 103 மதிப்பெண் பெற்ற பொதுப் பிரிவு மாணவர்களும் சேர்க்கை பெற வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.

நாடு முழுவதும் 65,000 முதல் 70,000 முதுநிலை மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின் றன.

இதில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங் கள் சேர்க்கை இன்றி காலியாக விடப்பட்ட நிலையில், சேர்க்கைக் கான தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க இந்திய மருத்துவச் சங் கம் (ஐஎம்ஏ) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படை யில், முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் சேர்க்கையின்றி வீணா வதை தடுக்கும் வகையில் என்பிஇ எம்எஸ் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews