தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூரைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 15, 2026

Comments:0

தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூரைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு

தற்கொலைக்கு முயன்ற பெரம்பலூரைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் உயிரிழப்பு

பணி நிரந்தரம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது தற்கொ லைக்கு முயன்ற பெரம்பலூரைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர், சிகிச்சை பலனின்றி புதன் கிழமை உயிரிழந்தார்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ் எஸ்டிஏ) சார்பில் சென்னையில் கடந்த டிச.26 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல, பணி நிரந்தரக் கோரிக்கையை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியர்களும், கடந்த 7 நாள்களாக சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி அலுவலகம் முன்பு போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரி யர்களை போலீஸார் கைது செய்து, வானக ரத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, பெரம்பலூர் மாவட்டம், நெய்க் குப்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர், மன உளைச்சலுக்குள் ளாகி மண்டபத்தில் இருந்த வார்னிஷை குடித் தார்.

இதை அறிந்த சக ஆசிரியர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன் கிழமை உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews