அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 17, 2025

Comments:0

அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள்

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20


அரசு பள்ளியில் தமிழ் பயிலும் வடமாநில குழந்தைகள் Northern state children studying Tamil in government schools

ஓசூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், தமிழக மாணவர்க-ளுக்கு இணையாக, வடமாநில குழந்தைகளும், தமிழ் படித்து அசத்துகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், உத்தரபிரதேசம், மத்திய பிர-தேசம், பீஹார் உட்பட பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி, தொழிற்சாலை, ரோஜா தோட்டம், செங்-கல்சூளை, கோழிப்பண்ணைகளில் பணிபுரிகின்றனர். தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக பேடரப்பள்ளி, உளிவீரனப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி, கொத்த-கொண்டப்பள்ளியில் அரசு பள்ளிகளில் வடமாநில குழந்தைகள் அதிகமாக படிக்கின்றனர். இதேபோல் ஓசூர் அருகே ஜீமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிக எண்ணிக்கையில் வடமாநில குழந்தைகள் படிக்-கின்றனர். இங்கு எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, 180 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இதில், 90 பேர் வட-மாநில குழந்தைகள். இப்பள்ளியில் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி மொழியிலும் பாடம் கற்று கொடுக்-கப்படுகிறது. ஆனாலும் வடமாநில குழந்தைகள், தமிழ் மொழியில் ஆர்வத்துடன் கல்வி கற்கின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் ஆகியவற்றை கூறி அசத்துகின்றனர். பள்-ளியில் தலைமையாசிரியர் ராஜப்பா உட்பட எட்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews