பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 17, 2025

Comments:0

பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

Plus-2-Public-Examination-Hall-Ticket-Release


பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்ரவரி 17) மதியம் வெளியிடப்பட உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை 3 லட்சத்து 78,545 மாணவர்கள், 4 லட்சத்து 24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்றனர்.

இதில் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (பிப்ரவரி 17) மதியம் வெளியிடப்பட உள்ளது.
1351103
இதையடுத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறையின் http://www.dge.tn.gov.in/ எனும் வலைதளத்தில் சென்று மாணவர்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதில் மாணவர்கள் விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து பின்னர் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேபோல், பிளஸ் 1 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 19-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews