TNPSC குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான வகுப்பு வடசென்னை அரசு ஐடிஐ வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கிண்டியில் உள்ள (தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதற்கான வகுப்பு வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு வடசென்னை ஐடிஐ வளாகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும். பயிற்சிக்கான கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பத்துடன் தங்கள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் கிண்டியில் உள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை பிப்ரவரி 10-ம் தேதிக்குள் அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு cgpecgc@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். வடசென்னை பகுதியை சேர்ந்த தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.