ஆசிரியர்கள் கண்டிப்பு - மாணவர் தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 02, 2025

Comments:0

ஆசிரியர்கள் கண்டிப்பு - மாணவர் தற்கொலை

799


ஆசிரியர்கள் கண்டிப்பு - மாணவர் தற்கொலை

பண்ருட்டி அடுத்த கீழிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்,40; விவசாயி; இவரது மகன் கலையரசன்,14; இவர் மேலிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் கலையரசன் மற்றும் சக மாணவர்களிடையே வகுப்பில் தகராறு ஏற்பட்டது. அவர்களை, வகுப்பு ஆசிரியர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். கடந்த 25ம்தேதி ஆசிரியைகள் இருவர், கலையரசனை அழைத்து கண்டித்தனர். இதில் மனமுடைந்த கலையரசன் மறுநாள் காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உடன் அவரை வீட்டில் இருந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.

இதுகுறித்து கலையரசனின் தாய் கன்னிகா அளித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் மகாலட்சுமி, சசிகலா ஆகியோர் மீது பின்.என்.எஸ்., 194 பிரிவின் கீழ் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84627041