அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்கு குவிந்த ரூ.500 கோடி நன்கொடை
சென்னை: அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்திற்கு, இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.
அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில், முன்னாள் மாணவர்கள், சிறு, குறு, பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் உள்ளிட்டோரை இணைக்கும் வகையில், கடந்த 2022, டிச.,ல், 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' எனும் அமைப்பை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அப்போது அவர், தன் சொந்த நிதியில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, https://nammaschool.tnschools.gov.in/ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, தனி வங்கிக் கணக்கு வாயிலாக, நன்கொடையாளர்கள் இணைக்கப்பட்டனர்.
அவர்கள் வழங்கிய நிதியில் செய்யப்பட்ட பணிகள் குறித்த விபரங்கள், புகைப்பட சான்றுகளாக அனுப்பப்பட்டன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.