TRB மூலம் மேலும் ஒரு போட்டித் தேர்வு Another competitive exam through TRB - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 06, 2025

Comments:0

TRB மூலம் மேலும் ஒரு போட்டித் தேர்வு Another competitive exam through TRB

1349834


TRB மூலம் மேலும் ஒரு போட்டித் தேர்வு

அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் நேரடி நியமனம் முதல்முறையாக டிஆர்பி போட்டித் தேர்வு மூலம் நடைபெற உள்ளது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இதுவரை அப்பல்கலைக்கழகம் வாயிலாகவே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர்கள், நூலகர்கள் முதல்முறையாக டிஆர்பி போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளனர். உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 24.11.2023 அன்று வெளியிட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களையும் ஆன்லைனில் பெற்றது. ஆனால், பணி நியமனம் தொடர்பாக அடுத்த கட்ட பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி உதவி இயக்குநர் நேரடி நியமன போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் அறிவித்துள்ளார். இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, இல்லை நிராகரிக்கப்பட்டதா என்பதை ஆன்லைனில் ( https://rcell.annauniv.edu/Direct Recruitment ) தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84722197