குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 06, 2025

Comments:0

குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்

8992994-tnpsc


No change in Group-1, 2, 4 exam syllabus- TNPSC Information - குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., '2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84670733