நுாறு சதவீத தேர்ச்சி பெற்றாலும் மேல்நிலை கல்விக்கு வழியில்லை - அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்
நுாறு சதவீத தேர்ச்சி பெற்றாலும் மேல்நிலை கல்விக்கு வழியில்லை - தேவகோட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கல்
அரசின் சலுகைகள் அனுபவிக்க முடியாமல் ஏழை மாணவர்களின் அவதியை போக்க அரசு மேல்நிலைப் பள்ளி பற்றி முதல்வர் அறிவிப்பாரா.
தேவகோட்டையில் 15 அரசு நடுநிலைப்பள்ளி, ஒரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் உதவி பெறும் பள்ளிகள் அதிகம் உள்ளன.
மேல்நிலை படிக்க வேண்டும் என்றால் தனியார் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் தான் உள்ளன. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி எதுவும் கிடையாது.
தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவதோடு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவே சேர்க்கை என்பதால் அந்த பள்ளிகளில் கூடுதல் மார்க் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.