TNPSC Telegram Channel மூன்றே வாரங்களில், 81,000 பேர் சேர்ந்துள்ளனர்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், டெலிகிராம் சேனலில், மூன்றே வாரங்களில், 81,000 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த மாதம் 14ம் தேதி, டெலிகிராம் செயலியில், TNPSC என்ற புதிய சேனலை, டி.என்.பி.எஸ்.சி., துவங்கியது. இதில், புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் 81,000 பேர் இதில் சேர்ந்துள்ளனர்.
அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த செப்., 13ம் தேதி, அசிஸ்டன்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் கிரேடு 2 எனும் அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பணிகளுக்கு, நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான கணினி வழித் தேர்வு, வரும் 14ம் தேதி பிற்பகலில் நடக்க உள்ளது.
இதற்கு, அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.