Model School ஆசிரியர்களுக்கு தீருமா Question Paper Issue?
அரசு தொடக்க பள்ளிகளில் மாதிரி பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பருவத்தேர்வுக்கான வினாத்தாள் நகல் எடுத்து வழங்குவதால் அதற்கான செலவு ஆசிரியர்கள் தலையில் விழுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
போதிய ஆசிரியர், தொழில்நுட்பம் அடிப்படை வசதிகளுடன் 1200க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு கல்வி ஒன்றியத்துக்கு ஒன்று வீதம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இங்கு 1 முதல் 5 ம் வகுப்பு வரை நடக்கும் பருவத் தேர்வுக்கு வினாத்தாள் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதில், ஒரு வினாத்தாள் வழங்கி அதை நகல் எடுத்து மாணவர்களுக்கு வினியோகித்து தேர்வு நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதேநேரம் பிற அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் செயல்படும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனி வினாத்தாள் வழங்கும் நடைமுறை உள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது:
அரசு தொடக்க பள்ளிகளுக்கு ஒன்று முதல் 4 ம் வகுப்புக்கு வினாத்தாளில் விடை எழுதும் வகையில் பல பக்கம் கொண்டதாக வினாத்தாள் வழங்கப்படுகிறது.
5ம் வகுப்புக்கு தனியாக விடை எழுதும் வகையில் இருக்கும். தேர்வு நாளன்று சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள் விநியோகிக்கப்படும். ஆனால் மாதிரி பள்ளிக்கு மட்டும் ஒரு வினாத்தாள் அனுப்பி அதை நகல் எடுக்க கூறுகின்றனர். நுாற்றுக்கணக்கான பிரதிக்கான செலவு ஆசிரியர் தலையில் விழுகிறது. பெரும் சோதனையாக உள்ளது.
இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.