பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!
பார்வை: 1.
ந.க.எண்:1468/B1/ Internet/ஒபக/2024, நாள்:23.12.2024
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி-பள்ளிகளுக்கான இணைய சேவை - மாதாந்திர சேவைக் கட்டணம் -அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி — அலுவலகத்திற்கு விடுவிக்க அனுமதி கோருதல்-சார்பு.
- இவ்வலுவலக கடிதம், ந.க.எண்:802/An/VE/SS/2023, நாள்: .04.2024.
2. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதம்,ந.க.எண்:827218/E2/2024 நாள்: .09.2024.
3. PAB Minutes 2024-25, F.No.9-1/2024-IS.6, நாள்:12.04.2024. ***** பார்வை 1- ன் படி 6224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.1500/-வீதம், ஏப்ரல் 2024 முதல் ஜுலை 2024 வரைக்குமான இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக்கட்டணத்திற்கான தொகை ரூ.3,73,80,000/- யை Vocational Education தலைப்பின் கீழ், பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
பார்வை 2-GOT படி இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக்கட்டணத்திற்காக 2973 உயர்நிலைப்பள்ளிகளுக்கு மாதம் ரூ.1500/- வீதம் 2024 ஆகஸ்ட் மாதத்திற்கு ரூ.44,59,500/-ம் மற்றும் 3074 மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 2024 மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு ரூ.92,22,000/- ஆக மொத்தம் ரூ.1,36,81,500/- நிதி பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. பார்வை 3- ன் படி, 6224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக்கட்டணத்திற்காக ரூ.1500/-வீதம் கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு ரூ.3,26,40,000/- நிதியை ICT Recurring Cost(Secondary Education) தலைபிலிருந்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் விடுவிக்கப்படுகிறது.
இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை உடனடியாக இணையதள சேவை நிறுவனங்களக்கு உடனடியாக செலுத்திடவும், அவ்வாறு மாதாந்திர சேவை கட்டணம் செலுத்தியதற்கான விவரங்களை தலைமையாசிரியர்கள் உடனடியாக பள்ளி EMIS login இல் Upload செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD SPD - Internet Proceeding - PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.