வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை - Scholarships to study abroad - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 23, 2024

Comments:0

வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை - Scholarships to study abroad



வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஏழை மாண

வர்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறச்செய்வதன் வாயிலாக, அவர்களை பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டில் பங்குபெறச் செய்வதை நோக்கமாகக் கொண்டு 'நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. படிப்புகள்:

முதுநிலை பட்டம் அல்லது பிஎச்.டி., போன்ற உயர்கல்வியை வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகளை இத்திட்டம் ஏற்படுத்தித் தருகிறது.

கல்வி நிறுவனங்கள்:

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான நடவடிக்கைகளை அவர்களே மேற்கொள்ள வேண்டும். கல்வி நிறுவனத்திடம் இருந்து சேர்க்கைக்கான ஆணையை பெற்று, அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன்பேரில், உதவித்தொகை உறுதிசெய்யப்படுகிறது.

யார் விண்ணப்பிக்கலாம்?:

தாழ்த்தப்பட்ட பிரிவினர், குறிப்பிடப்பட்ட பழங்குடியினர், பாரம்பரிய கைவினைஞர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளி ஆகிய பிரிவினர் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை விபரம்:

முழு கல்விக்கட்டணம், ஆண்டுக்கு 15,400 அமெரிக்க டாலர்கள் அல்லது 9,900 பவுண்டுகள், விசா கட்டண்ம், உபகரணங்களுக்கான செலவீனங்கள், விமானக் கட்டணம் ஆகியவை வழங்கப்படுகிறது.

கால அளவு:

முதுநிலை பட்டப்படிப்பிற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கும், பிஎச்.டி., படிப்பிற்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மொத்த உதவித்தொகை எண்ணிக்கை: 125

விண்ணப்பிக்கும் முறை:

https://nosmsje.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews