TET - பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு. எதிர்பார்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள்.
02/06/2023 அன்று வெளிவந்த TET தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, மேல்முறையீட்டுக்காக தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.
உள்ளபடியே பல்வேறு வகைகளில் இந்த வழக்கின் முடிவை ஆசிரியர்களும், தமிழக அரசும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளன.
இதற்கும் அப்பாற்பட்டு பல்வேறு வகைகளில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுவது ஏனெனில், 29/07/2011 தேதியிட்ட NCTE அரசாணையின்படி, TET ஒருவகையில் அடிப்படை ஆசிரியர் பணியிட தகுதிகளில் கொண்டு வரப்பட்டமையால், 29/07/2011 ஆம் தேதிக்கு பின்னர் அரசுப் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்பது போல, 29/07/2011 க்கு முன்னர் SGT களாக அரசு ஆசிரியர் பணியில் சேர்ந்து, 29/07/2011க்கு பிறகு SGT லிருந்து BT, SGT to HM, BT to HM களாக பதவி உயர்வு மூலமாக பணிபுரிந்து வரும் அரசு , அரசு உதவிபெறும், சிறுபான்மை, சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் தற்போது சுமார் 10000 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். எதிர்வரும் உச்சநீதிமன்ற தீர்ப்பில், பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்று வரும்பட்சத்தில், இந்த 10000 ஆசிரியர்கள் பதவியிறக்கம் செய்யப்பட நேரிடும். மேலும், இந்த 12 வருடங்கள் பதவி உயர்வு மூலம் பெற்றுவந்த வளரூதியம், ஊக்க ஊதியம் திரும்ப செலுத்த வேண்டிய சூழலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இதை தவிர்க்கும் விதமாக அரசு கொள்கை முடிவுகளில் ஒருசில மாற்றங்கள் செய்து, இந்த 12 வருடங்களில் பதவி உயர்வுகள் மூலமாக BT, ELEMENTARY HM,MIDDLE SCHOOL HM ஆனவர்களுக்கு TET க்கு நிகரான REFRESHMENT COURSES அல்லது சிறப்பு TET வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு பாதுகாக்கும் என காத்துக்கொண்டு உள்ளனர்.
23/08/2010 (அல்லது)
29/07/2011 முதல்
16/11/2012 க்கு முன்பு வரை TET இல்லாமல் பணிநியமனம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும், AIDED, MINORITY பள்ளிகளின் நிரந்திரபணியிட 6900+ ஆசிரியர்கள் என அனைவரின் வாழ்வாதாரமும் தமிழக அரசு எடுக்கும் கொள்கை முடிவில் தீர்வு எட்டப்படும் நிலையில் உள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த இந்த TET குளறுபடிகள், திமுக ஆட்சி அமைந்து 3 வருடங்களுக்கு மேலாகியும், தீர்க்கப்படாமல் இருப்பது ஒருவகையில் பணியில் உள்ள ஆசிரியர்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருந்தாலும், தொடர்ந்து பல்வேறு ஆசிரிய சங்கங்கள் நம்பிக்கையுடன் மனுக்களை தமிழக அரசிற்கு கொடுத்துக் கொண்டுதான் வருகின்றன.
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் இந்த பணியில் உள்ள ஆசிரியர்களின் TET கட்டாயம் என்ற நிபந்தனைகளை நீக்க வழிவகை செய்வதால் பல்வேறு TET வழக்குகளும் முடிவுக்கு வரலாம். இவ்வாறான காரணங்களால் TET பதவி உயர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கு முக்கியத்துவம் அடைகிறது.
- த.முகிலரசன்,
பட்டதாரி ஆசிரியர்,
ஈரோடு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.