அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 26, 2024

Comments:0

அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்



அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், விநாடி-வினா மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் கீழ் பள்ளி அளவிலான போட்டிகள் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்வியாண்டு அட்டவணையில் ஒதுக்கப்பட்ட பாடவேளைக்கு ஏற்றபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்த வேண்டும். இந்த செயல்பாடுகள் வாராந்திர அடிப்படையில் நடத்தப்படுவது அவசியம். இந்த போட்டிகள் அடுத்தடுத்து வட்டார, மாவட்ட, மாநில அளவில் நடைபெறும். இதில் அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.

போட்டிகள் நடைபெறுவதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இதுதொடா்பாக அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அனைத்து வகை மன்ற போட்டிகளையும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews