பொறியியல் படிப்பிற்கான 2ஆம் சுற்று கலந்தாய்வு: 1,56,734 இடங்கள் உள்ளதாக அறிவிப்பு..!
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு 19,922 மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வு பொறியியல் படிப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் சுற்று பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்ற ஆக.10 காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்-ஆஃப் மதிப்பெண் 178.975 முதல் 142 வரை உள்ள 77,948 மாணவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை இன்று (ஆக.12) மாலை 5 மணி வரை மாணவர்கள் தேர்வு செய்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் கொடுத்துள்ள விருப்ப பட்டியலின் அடிப்படையில் நாளை 13ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதனை மாணவர்கள் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் கொடுத்த விருப்பத்தின் அடிப்படையில் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை ஆணையும், UPWARD கொடுத்த மாணவர்களுக்கு அதற்கான படிவமும் அனுப்பப்படும்.
தொடர்ந்து ஆகஸ்ட் 15 முதல் 20ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரியில் சென்று சேர வேண்டும். அதேபோல், பொதுப் பிரிவில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டின்கீழ் தரவரிசை பட்டியலில் 1,344 முதல் 10,837 வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கும் ஆகஸ்ட் 10 முதல் 12ஆம் தேதி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்தல், 13ஆம் தேதி தற்காலிக இட ஒதுக்கீடு செய்யப்படும்.
இதனை அடுத்து ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தற்காலிக இடத்தை உறுதி செய்யும் மாணவர்களுக்கு, ஆகஸ்ட் 15ஆம் தேதி இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதன்படி ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 1,44,713 இடங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12,021 இடங்களிலும் என 1,56,734 இடங்கள் உள்ளன எனப் பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.