தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் ஜூன் 12 வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்குத் தேர்வெழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுத் துறை நாளை (ஜூன் 12) வெளியிடுகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு ஜூன்/ ஜூலை மாதங்களில் நடத்தப்பட உள்ளன. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 21 முதல் ஜூலை 8-ம் தேதி வரையும், 2-ம்ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் ஜூலை 8-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்தத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தத்கல் உட்பட) ஹால்டிக்கெட்கள் நாளை (ஜூன் 12) மதியம் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வறைக்குள் ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
Search This Blog
Tuesday, June 11, 2024
Comments:0
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84602661
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.