வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையத்தை அறிய!
https://electoralsearch.eci.gov.in/ பக்கத்தில் வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்தால் நமக்கான சட்டசபை நாடாளுமன்ற தொகுதி எது நமக்கான வாக்குச்சாவடி மையம் எது வாக்குச்சாவடி நிலை அதிகாரி, தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரது பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா? https://electoralsearch.eci.gov.in செல்போன் என்னை கொடுத்து கடவுச்சொல் (pass word) பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் செல்போன் நம்பர், வாக்காளர் அட்டை நம்பர்,
இமெயில் என ஏதாவது ஒன்றை உள்ளீடு செய்து கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைய வேண்டும்,
பின்னர் நமது வாக்காளர் அடையாள எண்ணை சமர்ப்பித்து செல்போனுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) பதிவு செய்தால், வண்ண வாக்காளர் அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியல் இருக்கிறதா? என்பதனை https://electoralsearch.eci.gov.in
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பெயர் மற்றும் தொகுதி அல்லது செல்போனில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.