*அனுப்புநர்*
மாவட்ட நிர்வாகிகள்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தூத்துக்குடி மாவட்டம்.
*பெறுநர்*
மரியாதைக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம்.
*மதிப்பிற்குரிய அய்யா*
*பொருள்:* தேர்தல் பயிற்சி மையங்களில் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டுதல் - சார்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் 07.04. 2024 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சியானது 6 மையங்களில் நடைபெற்றது. அன்றைய பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைப் பணியாளர்களுக்கு பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறைபாடுகள் இருந்தன. அக்குறைபாடுகளை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகிறோம். தாங்கள் அவைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கீழ்காணும் கோரிக்கைகளையும் நிறைவேற்றுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
*கோரிக்கைகள்*
♦️ தேர்தல் பயிற்சி மையங்களில் உள்ள பல அறைகளில் பயிற்சிக் குறைபாடு மற்றும் ஒளி- ஒலி குறைபாடுகள் இருந்தன. ஆகவே பயிற்சி வகுப்புகள் நன்கு திட்டமிடப்பட்டு பயனுள்ள வகையிலும் ஒளி - ஒலி குறைபாடுகள் இல்லாதபடியும் நடத்தப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறையிலும் மாதிரி CU-VVPAT-BU கொண்டு பயிற்சி நடத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். ♦️தேர்தல் பயிற்சி மையங்களில் போதுமான இட வசதிகள் இருந்தும் தேர்தல் பயிற்சிக்கு வரும் பணியாளர்களின் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே சாலையிலேயே வாகனங்களை நிறுத்தும் சூழ்நிலை நேர்ந்துவிடுகிறது. ஆகவே தேர்தல் பயிற்சிக்கு வரும் பணியாளர்களின் வாகனங்கள் தேர்தல் பயிற்சி மைய வளாகத்திற்குள் (போதுமான இடவசதி இருக்கும் பட்சத்தில்) அனுமதிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
♦️07.04.2024 அன்று நடந்த இரண்டாம் கட்ட பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு பயிற்சி மையங்களில் தேநீர்,வடை சில மையங்களில் உணவு கூட வழங்கப்பட்டிருக்கின்றன.வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இவைகள் வழங்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
*இப்படிக்கு*
*மாவட்ட நிர்வாகிகள்,*
*நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,* *தூத்துக்குடி மாவட்டம்.*
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.