ரயில் டிக்கெட்: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வசதிகள்: பயணிகள் குஷி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2024

Comments:0

ரயில் டிக்கெட்: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வசதிகள்: பயணிகள் குஷி!



ரயில் டிக்கெட்: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய வசதிகள்:

இனி ரயில் டிக்கெட்டை ஈஸியா வாங்கலாம்..

Google Pay, Phone Pe இருந்தா போதும்..

ரயில் பயணிகள் குஷி!

இன்று ஏப்ரல் 1-ம் தேதி முதல், ரயில்வே தனது பொது டிக்கெட்டுகளை செலுத்துவது தொடர்பாக ஒரு விதியை கொண்டு வந்துள்ளது.

இன்று முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்களை ஸ்டேஷனில் இருந்தபடியே ஆன்லைனில் எடுக்கும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது

ஏப்ரல் 1 முதல் ரயில்வே பொது டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த டிஜிட்டல் QR குறியீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் UPI மூலம் உங்கள் பொது ரயில் டிக்கெட்டையும் வாங்கலாம். நாட்டின் பல ரயில் நிலையங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் கவுன்டர்களிலும் ஆன்லைன் டிக்கெட் வசதியை வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த சேவை ஏப்ரல் 1, 2024 முதல் மக்களுக்காக தொடங்கப்படும்.

ரயில்வேயின் இந்த புதிய சேவையில், மக்கள் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டரில் QR குறியீடு மூலம் பணம் செலுத்த முடியும்.

இதில் பேடிஎம், கூகுள் பே மற்றும் போன்பே போன்ற முக்கிய யுபிஐ முறைகள் மூலம் பணம் செலுத்தலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews