பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பணிகள் துவக்கம் Plus 2 answer paper evaluation tasks start
பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் மதிப்பீடு திங்கள்கிழமை (ஏப்.1) முதல் நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1-இல் தொடங்கி 22-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இவா்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது மதிப்பீட்டு முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன. இதையடுத்து மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்.1 இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் சுமாா் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடுவா்.
தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 6-இல் வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டின்போது ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.