கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் Stay safe from summer heat: Department of Education advises teachers, students
பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி ஆகியோர் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல்கோடை வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக கோடை வெப்பத்தின் தாக்கமும் வெகுவாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, அனைத்துவித பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். மதியம் 12 முதல் 3 மணி வரைநேரடி வெயில் படும் திறந்த வெளியை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நேரங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள், விளையாட்டுகள் அல்லது உடற்பயிற்சி ஆகியவற்றை திறந்த வெளியில் நடத்தக்கூடாது.
மாணவர்கள் தண்ணீர் அதிகஅளவு பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓஆர்எஸ்மற்றும் எலுமிச்சை சாறு, நீர்மோர்,லஸ்ஸி, பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம்.
அனைத்து பள்ளிகளிலும் ஓஆர்எஸ் பாக்கெட்கள், முதலுதவிபெட்டகத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், வெப்பம் தொடர்புடைய உடல் நோய்கள் ஏற்பட்டால் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்த வேண்டும். இந்த விவரங்களை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக் கும் தெரிவிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.