10-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எழுத்துப் பிழை: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 14, 2024

1 Comments

10-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எழுத்துப் பிழை: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு



10-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் எழுத்துப் பிழை: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு 10th Class Tamil Question Paper Spelling Error: Order to award full marks

பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாளில் எழுத்துப் பிழையான வினாவுக்கு விடையளிக்க முயற்சித்த மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. மார்ச் 28-ல் ஆங்கிலம், ஏப்.1-ல் கணிதம், ஏப்.4-ல் அறிவியல், ஏப்.8-ல் தேதி சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் நடந்தது. இதில் மார்ச் 26-ல் நடந்த தமிழ் மொழிப் பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். ஆனால் வினாத்தாளில் பகுதி 111-ல் பிரிவு 2-ல் எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் என்ற பகுதியில் 33வது வினாவில், “நெடுநாளாகப் பார்க்க பண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக” என்று வினா உள்ளது.

இதில் ‘எண்ணியிருந்த’ என்பதற்குப் பதிலாக தவறுதலாக ‘பண்ணியிருந்த’ அதாவது ‘ எ’ என்ற எழுத்துப்பதிலாக தவறுதலாக ‘ப’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. இதனால் மாணவர்கள் அந்த வினாவுக்கு விடையளிக்கலாமா, வேண்டாமா என்று சற்று தடுமாற்றம் அடைந்தனர்.

இதற்கு வினாவுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர். இதுகுறித்து இந்து தமிழ் திசையில் மார்ச் 27ல் செய்தி வெளியானது. தற்போது தேர்வுத்தாள்கள் திருத்தும் பணியும் நடந்து வருகிறது. அதில் அரசுத்தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறிப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Sir English paper answer key is mistake please take action*பத்தாம் வகுப்பு மாணவர்களின் நலன் காக்கப்படுமா...?*

    நேற்று(12-04-2024) பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. அதில் ஆங்கில பொதுத் தேர்வில் கேள்வி எண் 44 (ERROR SPOT) 4 வது கேட்கப்பட்ட வினாவிற்கு
    Her cousins as well as she are hardworking என்ற பதிலை மட்டும் (புத்தகத்தில் கொடுக்கப்பட்டதை) மட்டும் விடையாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு கீழ்கண்டவாறு பல வழிகளில் மாணவர்கள் எழுதி இருக்கலாம்...

    Question :

    (d) *Her cousins as well as she is hardworking.*

    Answers :

    *1. Her cousins as well as she are hardworking.*

    *2. Her cousin as well as she is hardworking.*

    *3.Her cousins and she are hardworking.*

    *4.Her cousin and she are hardworking.*

    *5.She and her cousins are hardworking.*

    *6.She and her cousin are hardworking.*

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews