ஏப்.10, 12-ல் நடக்கவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்.10,12-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் டிப்ளமா தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்படுகின்றன.
அதன்படி, ஏப்.10-ல் நடைபெற இருந்ததேர்வு ஏப்.24 அன்றும், ஏப்.12-ல் நடப்பதாக இருந்த தேர்வு ஏப். 25-ம் தேதியும் நடைபெறும். இத்தகவலைதொழில்நுட்பத் தேர்வுகள் வாரிய தலைவரும்,தொழில்நுட்ப கல்வி ஆணையருமான கொ.வீரராகவராவ் தெரிவித்தார். பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு Postponement of Polytechnic Examinations
ரமலான் பண்டிகையை முன்னிட்டு பட்டயத் தேர்வு (பாலிடெக்னிக்) தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10 மற்றும் 12- ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.
ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 24ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 25ம் தேதியிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கான தேதியும் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.