அரசு பள்ளி ஆசிரியை கொல்லப்பட்டது எப்படி? அப்படியே செய்து காட்டிய ஆசிரியர்
பெரம்பலூர் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி மாயமான ஆசிரியையை கொலை செய்யப்பட்டார். இவரை கொன்ற சக ஆசிரியர் சென்னை மெரினா கடற்கரையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எப்படி ஆசிரியையை கொன்றார் என்பதை அண்மையில் நடித்துக் காட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் 43 வயதாகும் தீபா. மாற்றுத்திறனாளி இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி முதல் மாயமாகினர். இதேபோல் அதே அரசுபள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய 44 வயது வெங்கடேசன் என்பவரும் மாயமானார். இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக கோவையில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தீபாவின் காரும், அந்த காரில் ரத்தக்கறை படிந்த சுத்தியலும், கத்தி ஒன்றும் கிடைத்தது இதனால் மாயமான ஆசிரியை கொல்லப்பட்டாரா அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுந்தது. இதை அறிய முயன்ற போலீசாருக்கு துப்பு துலங்கவில்லை... ஏனெனில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவானார்.
இதனால் தீபாவை, வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து வெங்கடேசனை பிடிக்க தனிப்படை போலீசாா் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த வெங்கடேசனை தனிப்படை போலீசார் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து பெரம்பலூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர்
விசாரணையில் தீபாவை அவரது காரிலேயே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, முருக்கன்குடி வனப்பகுதிக்கு வெங்கடேசன் அழைத்து சென்றுள்ளார். அங்க காரில் வைத்தே சுத்தியலால் அடித்துக்கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை காரிலேயே புதுக்கோட்டை அருகே பூசத்துறை வெள்ளாற்றின் கரையோரத்திற்கு எடுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த தகவல் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அண்மையில் வெங்கடேசனை போலீசார் புதுக்கோட்டை அருகே பூசத்துறை வெள்ளாற்றுக்கு அழைத்து சென்று, அங்கு அவர் காட்டிய பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஆசிரியை தீபா உடையதுதானா? என்பதை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்
இதையடுத்து தீபாவை கொலை செய்ததாக வெங்கடேசன் கூறிய இடமான முருக்கன்குடி வனப்பகுதிக்கு, அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நேற்று அழைத்து சென்றார்கள். அப்போது வெங்கடேசன் தீபாவை எப்படி கொலை செய்தார் என்று போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினார். தொடர்ந்த வெங்கடேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத்தருவதாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பலரிடம் வெங்கடேசன் பணம் பெற்று முதலீடு செய்திருக்கிறார். ஆனால் அந்த ஆன்லைன் வர்த்தக மோசடியால் வெங்கடேசன் கடனாளி ஆகியிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தீபாவிடமும் சரியாக பேசாமலும், பள்ளிக்கு செல்லாமலும் இருந்திருக்கிறார். இதனால் தீபாவிடம் கொடுத்த பணத்தை வெங்கடேசன் அவ்வப்போது கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தீபா, தன்னிடம் வெங்கடேசன் சரியாக பேசாமல் இருப்பது குறித்து அவரிடம் கேட்டு சண்டை போட்டதோடு, வெங்கடேசன் கொடுத்த பணத்தை அவரது முகத்தில் தூக்கி வீசியுள்ளார். தொடர்ந்து சமாதானம் அடைந்த வெங்கடேசன் தீபாவின் காரிலேயே வெளியே சென்றுள்ளார்.. அப்போது வெங்கடேசனுக்கும், தீபாவுக்கும் இடையே மீண்டும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த கோபத்தில் இருந்த வெங்கடேசன், தீபாவை தீர்த்து கட்ட முடிவு செய்து, முருக்கன்குடி வனப்பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.