TRB - இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 26,506 பேர் போட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2024

Comments:0

TRB - இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 26,506 பேர் போட்டி



TRB - இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 26,506 பேர் போட்டி 26,506 Candidates for TRB - Intermediate Teacher Vacancies

அரசுப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 15-ம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

இதனிடையே, அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews