கல்லூரிகளில் சிசிடிவி கேமரா, ராகிங் தடுப்பு குழு அமைப்பு – AICTE வழிகாட்டுதல்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 14, 2024

Comments:0

கல்லூரிகளில் சிசிடிவி கேமரா, ராகிங் தடுப்பு குழு அமைப்பு – AICTE வழிகாட்டுதல்கள்!

கல்லூரிகளில் சிசிடிவி கேமரா, ராகிங் தடுப்பு குழு அமைப்பு – AICTE வழிகாட்டுதல்கள்! CCTV Camera in Colleges, Organization of Anti-Rogging Committee – AICTE Guidelines!

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் ஆனது வரவுள்ள கல்வி ஆண்டை முன்னிட்டு கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்:

2024 – 25 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ராகிங் தடுப்பு குறித்தான வழிகாட்டுதல்களை சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஏ ஐ சி டி இ ஆலோசகர் மம்தா அகர்வால் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே குழுவால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளை அனைத்து கல்லூரிகளிலும் விடுதிகளிலும் பின்பற்றி ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். மேலும் ராகிங் தடுப்பு குழுக்கள் அமைப்பது, முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது போன்ற ஏற்பாடுகளை கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டும். ராகிங் தொடர்பான எதிர்வினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை, கட்டுரை போட்டிகளை மாணவர்களுக்கு நடத்த வேண்டும். இது தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் உதவி எண்களை கல்லூரி வளாகங்களில் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews