3000 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு – தேர்தல் அதிகாரி தகவல்! 3000 government employees exempted from election duty – Election Officer information!
நாடாளுமன்றத்தின் தேர்தல் பணிகளில் இருந்து 3000 அரசு ஊழியர்கள் விலக்கு கோரி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மக்களவை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி என்று இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளது.
இப்பகுதிகளில் மட்டும் மொத்தம் 3096 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக முன்னதாக 1586 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவற்றில் 3000 பேர் தேர்தல் பணியில் இருந்து விலக்கு வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதனால் 12,843 அரசு துறை ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விலக்கு கோரி உள்ள அரசு பணியாளர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் மற்றும் நோடல் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக விலக்கு கோரும் நபர்கள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நியாயமான உரிமை கோரல்களுக்கு தேர்தல் செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இதனால் தேர்தல் பணிகளில் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.