இடைநிலை ஆசிரியர்களின் மாநில உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களின் மாநில உத்தேச முன்னுரிமைப் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குநர கம் சார்பில் மாவட்டக் கல்விஅ லுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்க ளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் வகுப்பு-3, வகை-2-இல் இடைநிலை ஆசிரி யர் பணியிடம் உள்ளது. 1.1.2024 நிலவரப்படி 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநி லைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன் னுரிமைப் பட்டியல் சுற்றறிக்கை யுடன் இணைத்து வெளியிடப்ப டுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர் களுக்கும் வட்டாரக் கல்வி அலுவ லர் மூலம் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) சார்பு செய்ய வேண்டும்.
உத்தேசப் பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பெயர், பிறந்ததேதி, இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த நாள், தொடக்கக் கல்வி மாவட் டம், ஒன்றியம், பள்ளியின் பெயர், இடைநிலை ஆசிரியருக்கான எமிஸ், அடையாளக் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து விவ ரங்களும் சரியாக உள்ளதா என் பதை சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப் படும் திருத்தம், சேர்க்கை, நீக் கம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் உரிய திருத்தம் செய்து இடைநிலை ஆசிரியர்க ளின் மாநில முன்னுரிமைப் பட்டி யல் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.