Breaking

Friday, March 01, 2024

SMC உறுப்பினர்களின் பதவிக் காலம் நீட்டிப்பு



எஸ்எம்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் ஏற் படுத்தப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) உறுப்பினர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்க ளின் பதவிக் காலம் 2024-ஆம் ஆண்டில் முறையே ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் நிறைவடையவுள்ளது.

இந்த பதவிக் காலத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து ஆணை பிறப்பிக்கு மாறு, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப் பினர் செயலர் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று, 2022-ஆம் ஆண்டு ஏப். 23-ஆம் தேதி கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ஜூலை 20-ஆம் தேதி வரையிலும், அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி கட்ட மைக்கப்பட்டவர்களுக்கு ஜூலை 27-ஆம் தேதிவரையிலும், 2022-ஆம் ஆண்டுமேமா தம் கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண் மைக்குழு உறுப்பினர்களுக்கு ஆக. 10-ஆம் தேதி வரையிலும், அதே ஆண்டு ஜூலை மாதம் கட்டமைக்கப்பட்ட உறுப்பினர்க ளுக்கு ஆக.17-ஆம் தேதி வரையிலும் பதவி காலம் நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் அரசாணை பிறப் பித்துள்ளார்.

அதேபோல், 2024-2026-ஆம் ஆண்டுக ளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கான புதிய உறுப்பினர்களை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக் குள் நியமிக்க வேண்டும்.

இந்த மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் நடவடிக்கை எடுக்க வும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog