பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர் சங்கங்களின் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; கிராம ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பணி புரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர் கள், உள்ளாட்சி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர் த.அமிர்தகுமார், செ.பீட்டர் அந்தோணிசாமி ஆகியோர் கூறியது:
தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து உள்ளாட்சி பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற் றுவதில் அரசுக்கு எவ்விதமான நிதிச் சிக்கலும் ஏற்படாது. திமுக தலை மையிலான அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த திட்டங் களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றனர்.
Search This Blog
Monday, March 04, 2024
Comments:0
பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
Tags
# Old Pension Scheme
ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழுவிற்கு எதிர்ப்பு - கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்ய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்குமாறு மூன்று ஆசிரியர்கள் வழக்கு.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாக வழங்கிய பணத்தை வசூலிக்க பென்ஷனில் பிடித்தம் செய்யும் அரசின் உத்தரவு அதிரடி ரத்து
Labels:
Old Pension Scheme
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84731457
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.