எண்ணும், எழுத்தும் திட்டம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 04, 2024

Comments:0

எண்ணும், எழுத்தும் திட்டம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி

%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF


எண்ணும், எழுத்தும் திட்டம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக் கக் கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) தொடங்குகிறது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

எண்ணும், எழுத்தும் திட்டத்தின் கீழ் தொடக்கக் கல்வி ஆசி ரியர்களுக்கு 3-ஆம் பருவத்துக்கான குறுவள மைய பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் பயிற்சிக் கான பாடங்களின் காணொலி பள்ளிக் கல்வி இணையதளத்தில் (tntp.tnschools.gov.in/login) पललं இதையடுத்து 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) முதல் 13-ஆம் தேதிக்குள் இந்தப் பயிற்சியை இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இரு நாள்களுக்குள் பயிற்சியை முடித்த பின்பு அதற்குரிய மதிப் பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று 4, 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசி ரியர்கள் வரும் புதன்கிழமை (மார்ச் 6) முதல் 14-ஆம் தேதிக்குள் இந்தப் பயிற்சியை இணையவழியில் மேற்கொண்டு பயிற்சி மதிப் பீட்டை முடிக்க வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்க ளுக்கும் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத் தல்களை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601025