பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி அட்டவணை General Examination Answer Key Revising Work Table
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது.
ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவு பெறவுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர்வு துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்ரல் 6 முதல் 25-ம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரையும் திருத்துதல் நடைபெற உள்ளது.
இவை நிறைவு பெற்றதும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் பிளஸ் 2 மே 6-ம் தேதியும், பிளஸ் 1 மே 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் படிக்க | 10th Paper Valuation Camp Schedule - 2024
இதையும் படிக்க | 11th Paper Valuation Camp Schedule - 2024
இதையும் படிக்க | 12th Paper Valuation Camp Schedule - 2024
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.