பள்ளிகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்தல் திட்டம் நாளை (23.02.2024) முதல் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 22, 2024

Comments:0

பள்ளிகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்தல் திட்டம் நாளை (23.02.2024) முதல் தொடக்கம்



பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம். பள்ளி மாணவர்களுக்கு தனி ஆதார் முகாம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் Separate Aadhaar camp for school students - School Education Secretary letter

தற்போது தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பிரத்தியேக தனித்தனி எண்கள் எமிஸ் வளையதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் முழு தகவல்கள் இடம்பெற்றுள்ளன மாணவர் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரை ஒரே எண் பராமரிக்கப்படுகிறது

மாணவர் பற்றிய தகவல் மற்றும் மாணவருக்கு தேவையான அரசு உதவிகள் அரசின் திட்டங்கள் சென்றடைய இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பெரும்பான்மையான மாணவர்களுக்கு ஆதார் எண் குழந்தையில் பிடிக்கப்பட்டுள்ளதால் "பயோ மெட்ரிக்" அதில் இணைக்க இணைக்காமல் உள்ளது எனவே பள்ளி மாணவர்களுக்கு பயோ மெட்ரிக் ஆதார் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும்பான்மையான ஆதார் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பள்ளி மாணவிகளுக்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடும் ஒன்றை அனுப்பி உள்ளது அதில் பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேகமாக ஒரு ஆதார் முகாம் நடத்த பள்ளிக்கல்வி செயலாளர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார் இதில் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஆதார் அட்டை மற்றும் ஆதார திருத்தங்கள் பயோ மெட்ரிக் மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews