ஆசிரியர் வீட்டுக்கும் , பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் ? பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 23, 2024

Comments:0

ஆசிரியர் வீட்டுக்கும் , பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் ? பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது



ஆசிரியர் வீட்டுக்கும் , பணிபுரியும் பள்ளிக்கும் இடையே எவ்வளவு தூரம் ? பள்ளிக்கல்வித்துறை விவரங்களை சேகரிக்கிறது

அரசு பள்ளி ஆசிரியர்கள் . அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்குள் இருந்து பணிக்கு வர வேண் டும் என்ற விதி நடைமுறையில் இருந்து வருகிறது . ஆனால் இந்த நடைமுறை பெரும்பாலான இடங்களில் பின்பற்றுவதே கிடையாது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி , இன வேறுபாடுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்த்து , நல்லிணக்கம் பேணுவதற்கான வழிமுறைகளை வகுத்து , அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணை யத்தை தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டது . அதன்படி , இந்த ஒருநபர் ஆணையத்தின் பள்ளிக்கல்வித் துறைக்கு சில விவரங்கள் கேட்டு வேண்டுகோள் விடுத்திருக் கிறது . அதன்படி , ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் பணியாற் | றும் ஆசிரியர்களின் பெயர் . அவர்களின் வீட்டுக்கும் , பள்ளிக் கும் இடையே 8 கி.மீ. தூரத்துக்குள் வசிப்பவர்கள் யார் ?, 8 கி.மீ. தூரத்துக்கு மேல் இருந்து பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் யார் ?, அவர்களின் இருப்பிட முகவரி ஆகியவை அடங்கிய விவரங்களை ஆசிரியர்களிடம் இருந்து கேட்டு பெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது ,

' மாண வர்கள் மட்டுமல்ல , ஆசிரியர்கள் கூட ஒரே சாதிய ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவ்வப்போது நடக்கிறது . சில பள்ளியில் ஒரே சாதியை சேர்ந்த ஆசிரியர்கள் . தலைமை ஆசிரியர் என குழுவாக செயல்படுவதையும் பார்க்க முடி கிறது . இதனை களைய இந்த விவரங்கள் கேட்கப்பட்டு இருக்க லாம் ' என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews