தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 23, 2024

Comments:0

தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள்

தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள் Secondary teachers have taken up hunger strike along with continuous blockade

தொடர் முற்றுகை போராட்டத்துடன் உண்ணாவிரதத்தையும் கையில் எடுத்த இடைநிலை ஆசிரியர்கள்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 19-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழக னார் கல்வி வளாகத்தை முற்றுகையிடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதுமான நிலையே நீடித்து வரு கிறது. அதன்படி, நேற்று 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவ்வாறு ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி னார்கள். அப்போது ஆசிரியர்கள் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்தபோது,போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கைது செய்த ஆசிரியர்கள் ஆங்காங்கே சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டும், அரசு தரப்பில் பேச் சுவார்த்தைக்கு இதுவரை அழைப்பு இல்லாததால், முற்றுகை போராட்டத்தில் கைதான ஆசிரியர்கள் சமூகநலக்கூடத்தில் இருந்தவாறு உண்ணாவிரத போராட்டத்தையும் கையில் எடுத்தனர். இதனால் சில ஆசிரியர்கள் மயங்கி கீழே விழுந் ததை பார்க்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) இடை நிலை ஆசிரியர்கள் போராட்டத்தைதொடர இருக்கின்றனர். அரசு தொடர்ந்து பேசாமல் இருந்தால், மற்ற ஆசிரியர் சங் கங்களும் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
IMG-20240223-WA0025

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84611688