திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பள்ளிக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகரை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் எந்தளவுக்கு தொழில் வளர்ந்து வருகிறதோ, அந்தளவுக்கு குற்றங்களுக்கு துணைபுரியும் பிற சம்பவங்களும் வளர்ந்து கொண்டே உள்ளன. பள்ளி அருகிலேயேபோதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் மொத்தமாக போதைப்பொருட்களை தந்து, அந்த மாணவர்களை பள்ளிக்குள் விற்பனை பிரதிநிதிகளாக சில கடைக்காரர்கள் மாற்றிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதுதொடர்பாக முன்னாள் கவுன்சிலர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
திருப்பூர் மாநகரில் உள்ள ஒருசில பள்ளிகளில்மாணவர்கள் போதைப்பொருட்களை உட்கொண்டு, வகுப்பில்அமர்ந்திருப்பதை காணமுடிகிறது.
இதுபோன்ற சம்பவங்களால் ஆசிரியர்கள்-மாணவர்கள் மோதலும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகரில்பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவதாகவும், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசி, எந்தெந்த இடங்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை அறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல் துறை உயர்அதிகாரி ஒருவர் பேசியுள்ளார்.
எனவே, போதைப்பொருட்கள் விற்பனை குறித்து ஆசிரியர்களிடம், மாணவர்கள் தெரிவிக்கவேண்டும். எதிர்கால சமுதாயத்தைகாக்கும் வகையில் பள்ளி அருகேபோதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணித்து, போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.