வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவர்கள்
விழுப்புரம்: வாக்கூர் பள்ளிக்கு நேற்று 2 மாணவிகள் மட்டுமே வந்தனர். மற்ற மாணவர்கள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து வரு கின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் கருணாகரன் (32) என்பவர் மீது பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, நவ. 28-ம்தேதி இரவு வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் அவரைபோக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், ‘ஆசிரியர் கருணா கரன் நல்ல மனிதர். பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களிடையே உள்ள ஈகோ பிரச்சினையில் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவரை சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்து நவ. 29-ம் தேதி முதல் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு 7 பேர் மட்டுமே வருகை தந்தனர். இரு மாணவிகள்: இந்நிலையில் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை மீண்டும் அனுப்ப வேண்டும் என தொகுதி எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் பள்ளியில் மாணவர்களின் பெற்றோர், முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், நேற்று 2 மாண விகள் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
இன்று அரையாண்டு தேர்வு தொடங்க உள்ள நிலையில் இது குறித்து கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டபோது, மாணவர் களின் கல்வி பாதிக்கக்கூடாது. கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி அரசின் அடிப்படை உரிமைகளை குழந்தைகள் பெற இச்சமூகம் உறுதுணையாக இருக்க வேண்டும் என பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் விழுப்புரம் குற்றவியல் நடுவர் ராதிகா முன்னிலையில் தினமும் 3 மாணவிகள் என ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.