பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்க NCERT குழு பரிந்துரை NCERT Committee recommends inclusion of Ramayana, Mahabharata in the syllabus
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் குழுவின் தலைவர் சி.ஐ. ஐசக் கூறியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அனைத்து வகுப்பறைகளின் சுவர்களிலும் உள்ளூர் மொழியில் எழுதி வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டைய கால வரலாறு பாடத்திட்டத்தின் கீழ், ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை ஆண்ட அனைத்து பேரரசுகள் குறித்த தகவல்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஜாம்பவான்களின் போராட்ட வாழ்க்கை, அவர்களது சாதனைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு ஐசக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.